1990களின் இறுதியில் புகழ் பெற்ற தொலைக்காட்சித் தொடரான சக்திமானை மீண்டும் ஒளிபரப்ப தூர்தர்ஷன் திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் தொலைக்காட்சித் தொடர்களை அதிகம் பார்த்து வருகின்றனர். ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட தொடர்களைத் தொடர்ந்து உபநிஷத் கங்கா, சாணக்யா, கிருஷ்ணா காளி, சர்க்கஸ் மற்றும் குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்த சக்திமான் தொடர்களையும் ஒளிபரப்ப தூர்தர்ஷன் முடிவு செய்துள்ளது. இதில் சக்திமான் தொடர் வரும் 1ம் தேதி முதல் மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகிறது.

0 Comments